செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி வைகை விரைவு ரயில், செங்கல்பட்டு – விழுப்புரம் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேர தாமதத்தால் பலரும் ரயிலில் இருந்து இறங்கி சாலைக்கு வந்து மாற்று வாகனங்கள் மூலம் பயணத்தை தொடர்ந்தனர். சேவை சீராவது குறித்து ஏதும் தகவல் இல்லை.
