டில்லி- சென்னை போல 15 நகரங்களுக்கு நாளை முதல் ரயில்

126
Spread the love
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. நாளை முதல் (12-ம்தேதி) இருந்து ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முதலில் நாளை டில்லியில் இருந்து 15 ரயில்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும். இவற்றில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. ரயில் நிலைய கவுண்ட்டர்களில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது.  மேலும் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட்டும் வழங்கப்படாது. டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ஸ்டேஷன்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். ரயில் நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படும். நோய்த்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ரயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா வார்டாகவும், சிறப்பு ரயிலுக்காகவும் 20 ஆயிரம் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே போதிய பெட்டிகள் கிடைப்பதை பொறுத்து பயணிகளுக்காக மேலும் பல ரயில்களை நிர்வாகம் இயக்க துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY