Spread the love

வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக பெய்தது. 2 நாட்களுக்கு முன் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி ஓமன் நாட்டை நோக்கி செல்கிறது. இதனால் தமிழக பகுதியின் ஈரப்பதத்தை அப்புயல்  ஈர்த்து செல்வதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் மழை இல்லை. 

இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது;
அரபிக்கடலில் உருவான புயல், வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது. வெப்பச்சலனத்தால் வடமேற்று மாவட்டங்களான சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம். வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இதனால் வரும் 28 ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும் என்றார்.

LEAVE A REPLY