தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

203
Spread the love

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY