ராஜபக்சே தப்ப முடியாது…வைகோ ஆவேசம்!

107
Spread the love

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். அப்போது அவர் அளித்த பேட்டி:  தேசத்துரோக வழக்கில் மேல்முறையீடு செய்தது ஏன்? என கேட்டதற்கு ஆவேசமான  வைகோ, இந்த கேள்வியில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றார். மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். இலங்கையில் இனப் படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது.

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பால் எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலை ஏற்படும். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது. இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

LEAVE A REPLY