ராஜஸ்தானில் படகு கவிழந்து விபத்து.. 11 பேர் பலி..

28
Spread the love

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் திபிரி சம்பால் என்னும் இடத்தில் உள்ள கோவிலுக்கு 45 பக்தர்கள் படகு ஒன்றில் ஆற்றின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்களை மீட்பதற்கு பொதுமக்களும், மீட்பு படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  இந்த விபத்தில் 11 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

மேலும் மூன்று பேர் மாயமாகி உள்ளனர். விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் அசோக் கெலாட், மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY