ரஜினியால் மட்டுமே நல்ல மாற்றத்தை தரமுடியும்.. தமிழருவி மணியன்

82
Spread the love

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.

ரஜினி விரைவில் கட்சித்தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ரஜினி தலைமையில் கடந்த மார்ச் மாதம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது பேசும் பொருளானது. இந்நிலையில் ரஜினியின் அரசியல்  பிரவேசம் குறித்து பேசியுள்ள தமிழருவி மணியன், “ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும், மூன்று நாட்களுக்கு முன்புகூட ரஜினியை சந்தித்து அரசியல் குறித்துப் பேசினேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY