கஜா புயல் பாதிப்பு.. 10 குடும்பங்களுக்கு புதிய வீடு வழங்கினார் ரஜினி ..

172
Spread the love

கடந்த ஆண்டு தமிழ்நாட்டை தாக்கிய கஜா புயலில் நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர்.

அப்போது கஜா புயலால் வீடுகள் இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று  அறிவித்திருந்தார்.

அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன. இந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்தார். 

பாதிக்கப்பட்டவர்களுடன் நாகை மாவட்ட மன்ற செயலாளர் ராஜேஸ்வரனும் சென்றிருந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY