Skip to content
Home » முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

தமிழகத்திற்கு  தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து நேற்று அவர் ஜப்பான் சென்றார்.  ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பான் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜப்பானில் உள்ள  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் சார்பிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் பெருமளவில் உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!