ஜனவரியில் ரஜினி கட்சி.. யார் யார்? கூட்டணி… பரபரப்பு தகவல்கள்..

536
Spread the love

நடிகர் ரஜினி நேற்று தனது மன்றத்தினருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜனவரியில் கட்சி ஆரம்பித்தால் சரியாக இருக்குமா?. 40 நாட்களில் மக்களை  ரீச் ஆக முடியுமா?..மக்களை நேரடியாக சந்திக்காமல் அரசியல் சரியாக இருக்குமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் இருந்து பதில் பெற்று இருக்கிறார். இறுதியில் நிருபர்களிடம் பேசி அவர் தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என கூறியிருக்கிறார். ரஜினியின் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்கிற நிலையில் அவர் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கும் மூடிற்கு வந்து விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதற்காக கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் நண்பர்களுடன் பேசி வந்த ரஜினி இது தொடர்பான முடிவினை எடுத்திருப்பதாகவே அவரது நண்பர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினியின் கட்சியுடன் சில கட்சிகள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் பாமக, அமமுக, புதிய தமிழகம் ஆகியவை ரஜினியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளன. திமுகவில் ஒரங்கட்டப்பட்ட அழகிரியும் இந்த கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கமலின் மக்கள் மையம் தற்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எங்கு கமலுக்கு 2 அல்லது 3 சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் அவரும் இங்கு வரலாம். பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தேமுதிகவிற்கு ரஜினி பக்கம் சேர வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் அதிமுக அவர்களை வளைத்து பிடித்திருக்கிறது.. இது தான் நிலை என்றாலும் ஜனவரிக்கு பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்..

LEAVE A REPLY