ரஜினியுடன் நயன்தாரா.. அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்.. படங்கள்..

11951
Spread the love

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில்  குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே 40% காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்  நடிகர் ரஜினிகாந்த், பிறந்தநாள் கொண்டாடிய கையோடு, தனி விமானம் மூலம்  ‘அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றார். . தொடர்ந்து 25 நாட்களில் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதேபோல் சூப்பர் ஸ்டாரைத் தொடர்ந்து, நயன்தாராவும் தனி விமானம் மூலம் ஹைத்ராபாத் சென்றுள்ளார். ஜீன்ஸ் பேண்ட் ஜீன்ஸ் ஷர்ட், ஹை ஹீல்ஸ், ஃபிரி ஹேர் என அசத்தலாய் ஹைதராபாத் சென்றிருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

LEAVE A REPLY