நாகூர், வேளாங்கண்ணி, சமயபுரம் செல்ல நினைத்தேன்… ரஜினி உருக்கம்..

405
Spread the love

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது.. கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர்களின் அட்வைஸ்படி தினமும் 16 மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண் டிருக்கிறேன். கொரோனா காரணமாக டூர் செய்ய முடியாத நிலை உள்ளது. அதற்கு எனது உடல்நிலையும் சரியாக இல்லை. என்னைப்பொருத்தவரை மக்களை நேரடி யாக சந்திக்காமல் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது. டிஜிட்டல் மீடியாவை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. இந்த தேர்தல் பிரச்சாரத்தை  நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு துவங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கொரோனா எல்லாவற்றையும் மாற்றி விட்டது. இந்தச் சூழலில் நீங்கள் வெளியில் செல்ல வேண்டாம் என குடும்ப உறுப்பினர்களும், டாக்டர்களும் அறிவுரை கூறுகின்றனர். என் உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உங்களை எல்லாம் களத்தில் இறக்கிவிட்டு, அதன் பிறகு எனக்கு ஏதாவது என்றால் நீங்கள் எல்லோரும் நட்டாற்றில் நிற்பீர்களே, அதுதான் என் கவலையாக உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது பாஜக போன்ற கட்சிகளோடு நான் எப்படி கூட்டணி வைக்க முடியும், அதற்கு வாய்ப்பே இல்லை. எம்ஜிஆர் படுத்துக்கொண்டே ஜெயித் தார் என்றால் அது அன்றைக்கு திமுக செய்த தவறான பிரச்சாரம். அவர்கள், எம்ஜிஆர் இறந்துவிட்டதாக கூறி பரப் பினார்கள். ஆனால், அதிமுகவினரோ எம்ஜிஆரின் வீடியோவை வெளியிட்டு ஓட்டு கேட்டனர். அது அதிமுகவுக்கு பெரும் பலமாக அமைந்தது. அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன் என்று கூறிய ரஜினி, கடைசியில் வரவில் லையே’ என்று பலரும் கிண்டல் செய்யலாம். அதை யாரும் ஈகோவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த விமர்சனத்தையும் பெரி தாக பொருட்படுத்த வேண்டாம். நான் எப் போதுமே வெளிப்படையாக, எதார்த்தமாக, நேர்மையாக, உண்மையாக, நடுத்தரமாக இருக்கிறேன். இனி வரும் காலங்களிலும் அப்படியே இருப்பேன். ஆகவே, எதிலும் நிதானமாக யோசித்து இறங்குங்கள். இப்போதைய சூழலில் அரசியல் நுழைவு என்பது சரியாக இருக்குமா? என்பதற்காக  தான் உங்களை அழைத்து பேசினேன் .. இவ்வாறு ரஜினி பேசினார்.

LEAVE A REPLY