விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த ரஜினி…

63
Spread the love

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை  கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மியாட் ஆஸ்பத்திரி தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைவார் என எதிர்பார்ப்பதாகவும் விளக்கம் அளித்தது. இதனிடையே விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விஜய்காந்த்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக எஸ்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY