அமைச்சர் கடம்பூர் ராஜு சிலீப்பர் செல் தான்… மாஜி ஒப்பன் ‘டாக்’

329
Spread the love

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே காலியாக உள்ள 2 எம்.எல்.ஏக்கள் தொகுதியினை சேர்ந்து 20 தொகுதிகளில் இடைத்தேர்தல்  நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் இந்த லிஸ்ட்டில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியிலும் வருகிறது. இந்த மாவட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். ராஜீ தலைமையில் இ.பி.எஸ். அணியினரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஓபிஎஸ் அணியினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சமீபத்தில் எம்.எல்.ஏ. சண்முகநாதன், அமைச்சர் மீது சில குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.  விளாத்திகுளம் தொகுதியில் சீட் பெற ஒ பி எஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயனும், இ.பி.எஸ். அணியில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பனும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ மணல் கொள்ளையர்கள், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கிடையாது என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.. இது ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆதரவாளாகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் விளாத்திகுளத்தில் அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு போட்டியாக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் வேறு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் அதிருப்த்தி ஆகி உள்ள  முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில் கட்சி நிர்வாகிகளுக்கான கூட்டத்திற்கு இந்த கூட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய நிலை அதிமுகவில் உள்ளது. இந்த விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜீ மறைமுகமாக தொந்தரவு கொடுத்து வருகிறார்.தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து கட்சி தலைமையும்,முடிவு செய்ய வேண்டும், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ முடிவு செய்ய முடியாது, என்னை குறை கூறும் அமைச்சர் கடம்பூர் ராஜீ என்ன தொழில் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும், நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெறவைத்தேன், ஆனால் அமைச்சர் கடம்பூர்.ராஜீவினால் கட்சினர் யாரும் வெற்றி பெற வைக்க முடியாவில்லை, அமைச்சர் கடம்பூர்.ராஜீவுக்கு கிடைக்கு வாக்கு ஒரே ஒரு வாக்குதான், அது அவர் மட்டும் தான்;.அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ தான் டி.டிவி. அணியில் ஸ்லீப்பர் செல், காரணம், சசிகலா குடும்பத்தின் வழியாக சீட் வாங்கி தேர்தலில் நின்றவர், அதிமுகவில் இருந்து ஆட்களை டி.டி.வி அணிக்கு அனுப்புவது அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தான். அவர் தொகுதி பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டால் அதிமுக டெபாசீட் கிடைக்காது, இதே நிலைமை நீடித்தால் தமிழகம் முழுவதும் 32 எம்.எல்.ஏக்கள் தான் இருப்பவர்கள் என்றார்.

LEAVE A REPLY