ராமதாசுக்கு பணத்தை பற்றிதான் கவலை… ஸ்டாலின் பாய்ச்சல்

182
Spread the love

வேலூர் மாவட்டம், ஆம்பூர் சோலூரில் திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வெட்கம், மானம் இல்லை. அவருக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை, பணத்தை பற்றிதான் கவலை. ஏற்கனவே 2009ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து  தான் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோற்றது. அதிமுகவின் கதை என புத்தகம் போட்டவர் ராமதாஸ். தற்போது இந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

மக்கள் பிரச்சனைக்காகவே திமுக கூட்டணி அமைக்கிறது.  வரும் மக்களவை தேர்தலில் பாமகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது மக்களவை தேர்தலுக்கு பிறகு தெரிய வரும். இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY