ராமகோபாலன் உடல் திருச்சியில் நல்லடக்கம்..

431
Spread the love

சென்னையில் காலமான இந்து முன்னனி அமைப்பாளர் ராமகோபாலன் உடல் இன்று  காலை 7 மணிக்கு திருச்சி மாவட்டம், சீரா தோப்புக்கு கொண்டு வரப்பட்டது.  ராமகோபாலன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த ராமகோபாலன் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ நிர்வாகிகள் எச்.ராஜா, கேசவவிநாயகம், கருப்பு முருகானந்தம், வீரமுத்திரையர் சங்க நிருவனர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமாேனார் அஞ்சலி செலுத்தினர். வேலூர் பொற்கோவிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் ராமகோபாலன் உடல் மீது தௌிக்கப்பட்டது. ராமகோபாலன் இறுதிசடங்கை இந்து முன்னனி பிரமுகர் பத்மநாபன் செய்தார். சரியாக மதியம் 12 மணிக்கு ராமகோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

LEAVE A REPLY