திருச்சியில் லாரியுடன் சிக்கிய ரேஷன் மண்எண்ணெய்.. 2 பேர் கைது..

224
Spread the love

திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரேஷன் மண்எண்ணெய் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் லோடு வேனையும் சுற்றி வளைத்து அதன் டிரைவர்கள் பாலக்கரை குட்செட் ரோடு ஆலம்தெருவை சேர்ந்த செல்வராஜ்(41), முதலியார் சந்திரம் கெம்ஸ்டவுன் மணிகண்டன்(39) ஆகியோரிடம்

விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்லும் மண்எண்ணையை கள்ளத்தனமாக வாங்கி, டேங்கர் லாரியில் மூலமாக எடுத்து வந்து பதுக்கி பின்னர் பேரல்களில் நிரப்பி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது தொிய வந்தது. இதனை தொடர்ந்து டேங்கர் லாரியில் இருந்த 2800 லிட்டர், இரும்பு பேரல்களில் இருந்த 800 லிட்டர் என 3600 லிட்டர் ரேஷன் கடை கடத்தல் மண்எண்ணை, லாரி, லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

LEAVE A REPLY