மீண்டும் ஆரம்பிக்கிறார் நாஞ்சில் சம்பத்

207
Spread the love

நாஞ்சில் சம்பத் இன்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி:  வரும் தேர்தல் அதிமுக- பா.ஜ கூட்டணியின் அஸ்தமனமாக அமையும். பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அதிமுக தொண்டர்கள், மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தேமுதிக, திமுக கூட்டணியில் சேரவே வாய்ப்புள்ளது. கமல் கட்சிக்கு தேர்தலில் தொகுதிக்கு 500 வாக்குகள் கிடைக்கும். ரஜினி தானும் குழம்பி, ரசிகர்கள் தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.பா.ஜ. வெற்றி பெற வாய்ப்பே இல்லை. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவார்.

திமுக பொது மேடைகளில் எனக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். அதிமுக. எனது முதல் எதிரி, முக்கிய எதிரி பாமக அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.டிடிவி. தினகரன் அதிமுகவின் வாக்கு வங்கியை 2 ஆக பிளப்பார். இந்த தேர்தல் வீழ்ச்சிக்கு பின் அவரால் எழுந்து நிற்கவே முடியாது. 21 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும். பின்னர் அதிமுக ஆட்சி கவிழ்ந்து ஸ்டாலின் முதல்வராவார்.  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  தீர்ப்பு வைகோவால் வந்தது. இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தயாராக உள்ளேன் என்றார்.

LEAVE A REPLY