தவறான செய்தி நிருபர் கைது

934
Spread the love

மும்பையில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் சொந்த ஊா் திரும்புவதற்காக பாந்த்ரா ரயில் ஸ்டேஷன் அருகே கூடினா். அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினர். இந்த நிலையில் மும்பையில் உள்ள மராத்திய செய்தி சேனலில் வெளியான தவறான செய்தி  தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அந்த மராத்திய சேனலில் நிருபர் ராகுல் குல்கா்னி, வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக ஜன சதாரன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக செய்தி வெளியிட்டார். இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாந்த்ரா ரயில்வே ஸ்டேஷனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பிரச்சனை ஏற்பட்டது. நிருபர் ராகுல் குல்கர்னி மீது வதந்தியைப் பரப்பி பிரச்னையை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சம்மந்தப்பட்ட சேனல் நிர்வாகி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

LEAVE A REPLY