பெரம்பலூரில் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்த போலீஸ் ஏட்டு மீட்பு

1064
Spread the love

பெரம்பலூர் அருகேயுள்ள மங்கலமேடு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் நடராஜன்(52). இவர் இன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நடராஜன் படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற திட்டக்குடி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாஸ்கர் மற்றும் மருத்துவ உதவியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர்  திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடராஜன் நேர்மையான காவலர் என்று பெயர் எடுத்தவர்.

அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாஸ்கர் மற்றும் மருத்துவ உதவியாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

LEAVE A REPLY