ரூ.50 ஆயிரம் கோடி புதிய கடன் யார்..யாருக்கு..? -ரிசர்வ் வங்கி

131
Spread the love

 ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதிகரித்துள்ள நிதி சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்புகளை வௌியிட்டு உள்ளார். அதில்….கடந்த நிதியாண்டின் இறுதியான மார்ச் 31-ம் தேதி வரை இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 588 பில்லியன் டாலராக இருந்தது.  இந்தியாவில் கரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கு தேவையான நிதி வசதிகளுக்காக 50,000 கோடி ரூபாய்க்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தடுப்பூசி மற்றும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சாதன விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், நோயியல் பரிசோதனைக் கூடங்கள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கரோனா தடுப்பூசி, கரோனா தொடர்பான மருந்து இறக்குமதியாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் போன்றோர்களுக்கு வங்கிகள் புதிதாக கடன் வழங்கலாம்.

சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கரோனா காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும். தனிநபர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு,குறு தொழில்களுக்களுக்கான கடன் தீர்மான கட்டமைப்பு அறிவிக்கப்படும். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும். சிறு நிதி வங்கிகள் ரூ.500 கோடி வரை சொத்து வைத்துள்ள சிறிய நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் தொிவித்து உள்ளார். 

LEAVE A REPLY