திருவெறும்பூர் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெல் மூழ்கியது…

180
Spread the love

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் திருச்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன.  திருச்சி திருவெறும்பூர், கீழக்குறிச்சி நத்தமாடிபட்டி ஆகிய பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழை நீர் நிரம்பி வயல்வெளிகளில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம்  ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராகி உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதற்கு

காரணம் இப்பகுதியில் உள்ள வடிகால்களை சரிவர துார்வாராததே என்று இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றன. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்து இப்பகுதிக்கு ஓடி வரும் நீரானது  கவுற்று வாய்க்கால் வழியாக வடிந்தோடும்.
ஆனால் தற்போது மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராமல் இருப்பதாலும், வடிகால் வாய்க்கால் போதிய பராமரிப்பின்றி கிடப்பதாலும் மழைநீர்
வெள்ளம் வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டன. முறையாக துார் வாரப்பட வேண்டும், உரிய இழப்பீடு தர வேண்டும் என்பதே தற்போதைய விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

LEAVE A REPLY