Spread the love

ஓய்வு பெற 6 மாத பணிக்காலம் இருந்தாலும் பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு 2 ஆண்டு பணிக்காலம் உள்ளவரையே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்தது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மாநில அரசு டிஜிபிக்களை சுயமாக நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY