அரிசி கடையை உடைத்து திருட்டு…. திருச்சி வாலிபர் கைது…

81
Spread the love

திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த முகமது அலி ஜின்னா(37) என்பவர், ஹீபர் ரோடு பகுதியில் அரிசி மண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல இரவில் கடையை சாத்திவிட்டு சென்ற அவர் காலையில் வந்து பார்த்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 8 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த கல்லாப்பெட்டி திருடு போனது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில்…. காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டையை சேர்ந்த ஜாம்பர் என்கின்ற அரவிந்த்(19) என்பவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY