Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகிய இருவரும், சியாம்சுந்தரை தாக்கி  கத்தியால் குத்தி  அவரிடம் இருந்து ரூ 10 ஆயிரத்தை  பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து சியாம்சுந்தர் தாந்தோணிமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துமகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகிய  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். வழிப்பற்றி வழக்கில் கைதான மகேந்திரன், கரூர்  மத்திய மேற்கு நகர அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!