ராக்போர்ட் எக்ஸ்பிரசில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. இன்ஜினியர் கைது

1089
Spread the love

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பி4 பெட்டியில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பப்பி சுருதி (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பயணம் செய்தார். இவர் தஞ்சை வல்லம் சாஸ்த்ரா பல்கல கழகத்தில்  3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதேப்பெட்டியில் அவருக்கு அருகில் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் (வயது 40) என்பவரும் பயணம் செய்தார். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையையொட்டி ஊரில் உள்ள மனைவியை பார்க்க வந்தார். அப்போது இரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் சுருதி திருச்சி ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான முத்துகுமார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 31-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY