கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டம் லக்காலாகட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் மாதர்- கங்கம்மா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ரமேஷ் வேறு சாதி என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த அவர்கள் தலைமறைவாயினர். பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்த அவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.