Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16.59 லட்சம் மோசடி…திருச்சியில் பெண் கைது.. டாக்டர் மீது வழக்கு…

ரீல்ஸ் தகராறில் மாணவர்கள் மோதல்- 2 பேர் காயம்-8 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டம் முத்து காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இதனால் அந்தப் பெண் தாய் வீட்டில் வசித்து வந்தார். விட்டில் தனியாக இருப்பதால் அவர் வேலைக்கு செல்ல முடிவு செய்து வேலை தேடி வந்தார் இந்நிலையில் அந்த பெண் திருச்சி மாவட்டம் துறையூர் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை அணுகி வேலை கேட்டதாக தெரிகிறது. அதற்கு செந்தில்குமார் தன்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர் உதவியுடன் அரசு வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில்குமார், டாக்டரும் அந்த பெண்ணை சந்தித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினர். பிறகு அந்த நாமக்கல் பெண் ரூபாய் 5 லட்சம் பணத்தை அரசு வேலையில் சேர கொடுத்துள்ளார்.பிறகு சிறிது நாட்களில் செந்தில்குமார்ஒரு போலி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.
இதையடுத்து நியமன ஆணை வந்த அரசு அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்தபோது அது போலி நியமன ஆணை என தெரிய வந்தது.
இதையடுத்து நாமக்கல் பெண் தான் ஏமாற்றப்பட்டத்தை கண்டு அதிர்ச்சிடைந்து செந்தில்குமாரிடம் தான் கொடுத்த ரூ 5 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் செந்தில் குமார் தராமல் மறுத்து உள்ளார். இதனையடுத்து
அந்த பெண் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் துறையூர்ரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவர்க்குஉடந்தையாக இருந்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு போலீசார் விசாரணை செய்தபோது செந்தில்குமார் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.முதல் கட்டமாக நான்கு பேரிடம் ரூபாய் 11லட்சத்து50 ஆயிரம்பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் டாக்டரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!