கூட்டணி கணக்கை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி!

183
Spread the love

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் போதும் என்ற நிலையிலும் அந்த கூட்டணி முதல்வர் பிரச்னையில் ஆட்சியமைக்க முடியவில்லை. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரே சிவசேனா அமைச்சர் அர்விந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதையடுத்து இரு கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இதனால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைக்க முயன்று வருகிறது.

இந்நிலையில் இன்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுயநலம் மோசமானது என்பது எல்லோருக்கும் தெரியும். சிலர்தான் தங்களது சுயநலத்தை விட்டுக் கொடுக்கிறார்கள். இதற்கு உதாரணமாக நமது நாட்டை அல்லது தனிப்பட்ட நபர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் இருவரும் ஒரு விஷயத்துக்காக சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே இழப்புகளை சந்திப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

அவர் குறிப்பிட்டது பாஜ- சிவசேனா கட்சிகளைதான். இதற்கு முன்னதாக, சிவசேனா இல்லாமல் ஆட்சி அமைக்கக் கூடாது என்று பாஜகவுக்கு மறைமுகமாக அவர் கட்டளையிட்டிருந்ததாக கூறப்பட்டது.

சிவசேனா சரத்பவார், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் மோகன் பகவத் இவ்வாறு பேசியிருப்பது, மீண்டும் மகாராஷ்டிரா அரசியலில் கூட்டணி கணக்கை மாற்றும் முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY