எஸ்வி சேகரின் சிறை ஆசை நிறைவேறும்.. ஜெயக்குமார் கிண்டல்

137
Spread the love

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு மாணவர்கள் பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்? தி.க., தி.மு.க போல் ஏன் அதிமுக செயல்படுகிறது? முதலில் உங்கள் கட்சியில் உள்ள கொடியில் அண்ணா படத்தை தூக்குங்கள், கட்சிப் பெயரிலும் அண்ணா என்ற வார்த்தையை தூக்கிவிட்டு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று வையுங்கள். 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா ...அப்போது தான் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும்” என்று கூறியிருந்த அவர் தேசியக் கொடியில் உள்ள நிறங்களை விமர்சித்தும் பேசினார்.எஸ்வி சேகரின் இந்த விமர்சனத்தை பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார்  பேசியதாவது… எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும்.  மேலும் முதல்வர் பழனிசாமி குறித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் படியாக பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

LEAVE A REPLY