விஜய் கட்சிக்கு தந்தை சந்திரசேகர் முழுக்கு….

312
Spread the love

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் கடந்த 5ஆம் தேதி நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஏற்பாட்டின்படி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் மாநிலத் தலைவர் பதவியில் பத்மநாபனும், பொதுச் செயலாளர் என்ற இடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரும், பொருளாளர் என்ற இடத்தில் தாயார் ஷோபா பெயரும் இடம்பெற்றிருந்தது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மறுத்த விஜய், தனது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக பொருளாளர் பதவியில் இருந்து தாயார் ஷோபா விலகுவதாக அறிவித்தார். மேலும் தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாபன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு அவர் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட உடனடியாக அவரும் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடரும் குழப்பம் காரணமாக கட்சியே வேண்டாம் என்கிற முடிவு எடுத்துள்ள எஸ் ஏ சந்திரசசேகர் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்  “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்..

LEAVE A REPLY