ராகுலை தொடர்ந்து .. சச்சின் பைலட்டும் விலகுகிறார்..

260
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கடந்த 25 ஆம் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் ராகுல் தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.
இந்நிலையில் ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினால் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக சச்சின் பைலட்டும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் விலகி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சச்சின் பைலட் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY