4 ஸ்டார் வேண்டும் சச்சின் ஆசை…. வீடியோ

262
Spread the love

2011ம் ஆண்டின் உலக கோப்பை வென்றதன் 8வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கிரிக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்றது. அந்த அணியில் நானும் இருந்தேன் என்பது சந்தோஷமாக உள்ளது. விரைவில் உலக கோப்பை கிரிக்கெட் 2019 தொடங்க உள்ளது.

பிசிசிஐ லோகோ இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இம்முறை நாம் ஜெயிக்க வேண்டும். இந்திய அணியின் ஜெர்சியை கவனித்து இருந்தால் பிசிசிஐ லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்ஸ் இருக்கும். அந்த ஸ்டார்ஸ் நாம் எத்தனை முறை உலக கோப்பையை வென்று இருக்கிறோம் என்பதை குறிக்கும். இதுவரை 3 ஸ்டார்ஸ் ஜெர்சியில் உள்ளது. அதனை 4 ஸ்டார்களாக மாற்ற வேண்டும். அதுவே எனது ஆசை. இவ்வாறு  டெண்டுல்கர் அந்த வீடியோவில் பேசுகிறார்.

LEAVE A REPLY