Spread the love

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த வாரம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 60 மருத்துவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பணி முறிவு, பணியிட மாற்றம் 17பி போன்ற ஒழுங்கு நடவடிக்கை போராட்டம் டாக்டர்கள் மீது பாய்ந்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக டாக்டர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். ஆனால் பணியிட மாற்றம் திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7 நாட்களும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY