சேலத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

67
Spread the love

 சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 965 படுக்கைகளும், அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய 617 படுக்கைகளும் என மொத்தம் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 1.583 படுக்கைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2896 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 2,770 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுத்திடவும். ஊரடங்கினை சுண்காணித்திடவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனியாக உள்ளார்களா என்பதை கண்காணிக்கவும், கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலளை கண்காணித்திடவும், சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24×7 கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக 26 கோவிட் பராமரிப்பு மையங்களும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் 9 கோவிட் பராமரிப்பு மையங்களும் மற்றும் நகராட்சி பகுதிகளில் 3 கோவிட் பராமரிப்பு மையங்கள் ஆக மொத்தம் 38 கோவிட் பராமரிப்பு மையங்கள் (கோவிட் கேர் சென்டர்) துவக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சித்த மருத்துவத் துறையின் சார்பில் சேலம் – 8 அரக மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் 100 படுக்கை சித்த மருத்துவ கோவிட் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன் முறையாக தடையின்றி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை னபாயம், உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருந்தகம், தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது..

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை முதல்வர் ஸ்டாலின் இந்தமையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.  இம்மையத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமெனவும், 10 நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வின்போது,  மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆபத்தீர்வைத் துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி, எம்எல்ஏ்கள் மாவட்ட கலெக்டர் எஸ். கார்மேகம்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY