திருச்சியிலிருந்து சேலம் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

319
Spread the love

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவர் தஞ்சை மாவட்டம் கல்லணை மராமத்து பணிகளை ஆய்வு செய்த பின்னர், வல்லம் பள்ளிகரணை ஆகிய இடங்களில் அவர் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் கார் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் குழுமணி கொடியாலம் ஊராட்சி, கொடிங்கால் வாய்க்காலில் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி சர்க்கியூட் ஹவுசில் மதிய உணவுக்கு பிறகு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரை அமைச்சர்கள் நேரு, மகேஷ், கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்… 

LEAVE A REPLY