திடீரென சம்பளத்தை குறைத்த பிரபல நடிகை….

59
Spread the love

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘சகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘சகுந்தலம் ’ படத்தினை அனுஷாவின் ருத்ரமாதேவி படத்தினை இயக்கிய குணசேகர் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் ,துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் இளம் நடிகர் தேவ் மோகனும் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா 2.50 கோடி வாங்கியுள்ளாராம். ஆனால் அவர் மற்ற படங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் 3 கோடி. இந்த திரைப்படம் புராண கதையை கொண்டதால் தனது சம்பளத்தில் 50 லட்சத்தை குறைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY