சரக்கு பதுக்கல் .. திருச்சி மாஜியின் தம்பி கைது ..

490
Spread the love

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (47). கார் டிரைவர். இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மனோகரன் வீட்டில் நேற்று திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் 480 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த தனிப்படைபோலீசார், மனோகரனை கைது செய்து, உறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மனோகரன் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோல் திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்றதாக செல்வம் (43), ரியாஸ் (27) ஆகிய 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY