சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.. விடமாட்டார் போல

307

தனது நிறுவனமான சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின்
தொடக்க விழா நேற்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்ற இவ்விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். படத்தை சரவணா ஸ்டோர் நேரடியாக தயாரிக்கிறது. 

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்  
பிரபு விவேக் ஆகியோர் நடிக்கின்றனர் கதாநாயகியாக மும்பை நடிகை ஈத்திகாதிவாரி நடிக்கிறார். இந்த பூஜையில் பிரபல இயக்குனர்எஸ்பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்

LEAVE A REPLY