Spread the love
முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம், கதை திருட்டு, வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு ஒரு வழியாக வெளியானது.இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்கள், காட்சிகள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அமைச்சர் பலரும் எச்சரிக்கை விடுத்து பேசினர். முதலில் இன்று காலை மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் சர்கார் திரையிடப்பட்ட தியேட்டரை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
அதன்பின் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  கோவை சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை காசி தியேட்டரை முற்றுகையிட்ட அதிமுகவினர் அங்கிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். திருச்சியில் சர்கார் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் முன்கூட்டியே பாதுகாப்பு அளிக்க தொடங்கியுள்ளனர்.  சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

LEAVE A REPLY