ஜெ.வின் சமாதிக்கு செல்லும் சசிகலா… தடபுடல் ஏற்பாடு…

215
Spread the love
அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார்.  மறுநாள் 17-ந் தேதியன்று தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 16ல் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடம் செல்வதால் சசிகலாவுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் அக்டோபர் 17ல் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் செல்ல உள்ளதால், பாதுகாப்பு கேட்டு தனியாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன் அளித்துள்ள அந்த மனுவில், சசிகலாவை ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சசிகலா ஜெ சமாதிக்கு செல்லும் நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதிலும் உள்ள அமமுகவினர் சென்னை வர அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY