57.8 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் கடந்த மாதம் 27ம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் தான் தண்டனை காலம் முடிந்து சசிகலா விடுதலையான நாள். ஆனால் கொரோனா காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து தமிழகம் வருவார் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜனவரி 27-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நினைவிடத் திறப்பு விழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் திரண்டு வந்து வருகை தந்தனர். இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று பொதுப் பணித்துறை கடந்த 2ம் தேதி அறிவித்தது. சசிகலா சென்னை திரும்பிய பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்கிற காரணத்திற்காக சமாதி மூடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. கடந்த 8ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு கார் மூலம் வந்த சசிகலா தற்போது தி நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார். சசிகலா தஞ்சை செல்வார் என்றும் தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொள்வார் என கூறப்படும் நிலையில் வரும் 24ம்தேதி, ஜெயலலிதாவின், 73 வது பிறந்தநாள். அன்றைய தினம் மெரினா கடற்ரையில் இப்போது மூடி வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், அன்றைய தினம் திறக்க வாய்ப்பு உள்ளது. அன்றைய தினம் அஞ்சலி செலுத்தி விட்டு தென்மாவட்ட பயணத்தை துவக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெ சமாதியில் சபதம் செய்து விட்டு சசிகலா கிளம்பினார் என்பது குறிப்பிடதக்கது…