விடுதலை எப்போது..? சசிகலா தரப்பின் மாஸ்டர் பிளான்…

725
Spread the love

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை எப்போது என  தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்கிற  நபர் கர்நாடக சிறைத்துறையிடம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த பதிலில் வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் எனவும், 10 கோடி ரூபாய் அபராதத்தை கட்டவில்லை என்றால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து 22ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி தான் சசிகலா விடுதலையாவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அபராதத்தொகையினை செலுத்து விட்டு அடுத்த மாதம் முதல்வாரத்தில் சசிகலா விடுதலையாவார் என கூறப்பட்ட நிலையில் பெங்களூர் தகவல் பலரையும் அப்செட் செய்திருக்கிறது. உண்மையில் என்னதான் நடக்கும்? என அமமுகவினர் தரப்பில் கேட்டால், எந்த பதட்டமும் இல்லாமல் அவர்கள்..  பெங்களூர் சிறை நிர்வாகம் கூறியிருப்பது உண்மை தான். அவர்கள் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களை கழிக்காமல் கூறியிருக்கிறார்கள். எங்கள் சின்னம்மா 2 முறை பரோலில் வந்திருந்தார். முறைப்படி அவருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை உண்டு, அதேபோல் அரசு விடுமுறை நாட்களும் உண்டு. இவை அனைத்தும் தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும். அந்த வகையில் விடுமுறைகள் வருடத்திற்கு 30 நாட்கள் என  மூனறை ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் லீவு மட்டும் 90 நாட்கள் வருகின்றன. இவற்றை கழிக்க வேண்டும். 10 கோடி அபராதத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. எனவே அக்டோபர் முதல்வாரத்தில் சின்னம்மா விடுதலையாவதை யாராலும் தடுக்க முடியாது என ஒரே மூச்சில் பதில் அளிக்கின்றனர்.. அதோடு . கர்நாடக  அரசு என்ன நினைக்கிறது என்பதனை எழுத்துப்பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆர்டிஐயை ஏற்பாடு செய்தது நாங்கள். அப்போது தான் எங்களது கோரிக்கையை விதிமுறைகளின்படி கர்நாடக சிறைத்துறைக்கு தெரிவிக்க வசதியாக இருக்கும் என கண்ணடிக்கின்றனர்… 

 

LEAVE A REPLY