சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 
 
இதில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டிச.3 ஆம் தேதி திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில்,கூடுதல் ஆவணம், திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு தேதியை தேர்வு செய்து விட்டு அந்த தேதியில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் என்றனர். பின்னர் திட்ட அறிக்கையை வரும் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

LEAVE A REPLY