கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன்

64
Spread the love

தமிழக கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டி ..  ஆகஸ்ட் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும். 1,6,9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அன்றைய தினம் முதல் தொடங்கும். ஆன்லைன் வழியாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும். 2,10ம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பும் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். மேல் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும்.இந்த நிலையில் பள்ளி திறக்க சாத்திய கூறுகள் தற்போது இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். 10ம் வகுப்பு பொதுதோ்வு முடிவுகளில் எந்தவித குழப்பமும் இல்லை. தனியார் பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY