வீட்டில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மிரட்டிய திருச்சி காதலன் மீது புகார்

472
Spread the love

திருச்சி டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில்  29 வயது இளம் பெண் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அவர் அளித்த மனு: “எனக்கு பெற்றோர் இல்லை. நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தேன். அப்போது கோட்டை பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். பின்னர் அவர் டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் என்னை குடி வைத்தார். ஒருநாள் தற்செயலாக பார்த்தபோது வீட்டின் ஜன்னலில் ஒரு கேமரா இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து காதலனிடம் கேட்டேன்.
அதற்கு “உன்னை நான் முழுசாக படம் பிடிச்சிட்டேன். என்கிட்ட நீ மன்னிப்பு கேட்க வேண்டும்.  கல்யாணம் செய்து கொள்ள கெஞ்ச வேண்டும். இல்லாவிட்டால் கேமராவில் உள்ளதை எல்லாம் இணையத்தில் வெளியிடுவேன்” என்று மிரட்டுகிறார். இது குறித்து போலீசில் புகார் அளித்தேன்.  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அலுவலக அதிகாரிகள், கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY