பாலத்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி… செல்ஃபி-யால் பரிதாபம்…

191
Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த நேஹா அர்சி என்னும் மாணவி சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், நேற்று தனது சகோதரருடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது லேசான மழை பெய்ததால் கிளைமேட்டை ரசித்துக்கொண்டிருந்த நேஹா, பாலத்தின் மீதுள்ள சுவரின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

பாலத்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி... செல்ஃபி மோகத்தால் நேர்ந்த சோகம்!

அப்போது நிலை தடுமாறி தவறி விழுந்ததில் நேஹா உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது நேஹாவின் சகோதரர் அருகே உள்ள கடைக்கு சென்றதால், அவருக்கு நேஹா பாலத்தின் மேல் இருந்து விழுந்தது தெரியவில்லை. நேஹாவைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நேஹா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேஹாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேஹா கீழே விழுந்ததை பார்த்த சாட்சியத்தின் அடிப்படையிலேயே இது விபத்து என தெரியவந்ததாகவும் போலீசார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY