சேனைக்கிழங்கு மிக்சர்…

42
Spread the love

தேவையான பொருட்கள்…
சேனைக் கிழங்கு –  250 கிராம்,
எண்ணெய் –  200 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது,
வேர்க்கடலை – 50 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப,
மிளகாய் தூள் – 1தேக்கரண்டி,
அரிசி மாவு – 2 தேக்கரண்டி,
பெருங்காயம் – சிறிது.

செய்முறை…  சேனைக் கிழங்கை தோல் சீவி, சதுரமாக வெட்டி கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பாதி வேக வைத்து  பின் அரிசி மாவு, மிளகாய்தூள் சேர்த்துப் பிசறவும். பின் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். இதனுடன் எண்ணெய்யில் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை பெருங்காயத் தூள் கலந்து பரிமாறவும்.இது நல்ல மொறு மொறு மாலை நேர ஸ்நாக்ஸ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். சாம்பார், ரசம் சாதத்துக்கு பொருத்தமாக இருக்கும்.

LEAVE A REPLY