செங்கல்பட்டில் 26 டாக்டர்கள், 28 போலீசாருக்கு கொரோனா….

51
Spread the love
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,949 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 55,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 21,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 33,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்டத்தில் 26 டாக்டர்கள், 28 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY