கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட துறை வர்த்தக வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது.

இன்று காலையும் வர்த்தகம் சரிவுடன்தான் தொடங்கியது. அதன்பின் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்ததையடுத்து எழுச்சி ஏற்பட்டது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
 

அடுத்த சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 460 புள்ளிக்கு மேல் உயர்ந்தது. அதன்பின்னும் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் சென்றது.
மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 38,119 புள்ளிகளுடனும், நிப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11,314 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது. இதனால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY